தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7 வயது மகனை கொன்று தந்தையும் தற்கொலை

7 வயது மகனை கொன்று தந்தையும் தற்கொலை

7 வயது மகனை கொன்று தந்தையும் தற்கொலை


ADDED : ஜூன் 03, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலியில், ஏழு வயது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள அண்ணா கிராமம் அரசமர தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், 29; இவரது மனைவி பவித்ரா; இவர்களின் மகன் ஜஸ்வந்த் ராஜ், 7. கடந்த, 2020ம் ஆண்டு பவித்ரா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கடந்த 6 ஆண்டுகளாக ஸ்டீபன் ராஜும் அவரது மகனும் தனிமையில் வசித்து வந்தனர். ஜஸ்வந்த் ராஜ் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், ஸ்டீபன்ராஜ் தனது சகோதரிக்கு வாட்ஸ் அப் மூலமாக, தகவல் தெரிவித்துவிட்டு, தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலையில், அவரது சகோதரி கொடுத்த தகவலின்பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இருவரின்  உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us