தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகுதி வாய்ந்தவர்களுக்கு தாய்வழி சான்றிதழ்

தகுதி வாய்ந்தவர்களுக்கு தாய்வழி சான்றிதழ்

தகுதி வாய்ந்தவர்களுக்கு தாய்வழி சான்றிதழ்


ADDED : ஜூன் 03, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஐகோர்ட் தீர்ப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களுக்கு தாய்வழி சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூ., வலியுறுத்தியுள்ளது.

மாநில செயலாளர் சலீம் அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் தாய்வழி சான்றிதழ் பெறுவதில் குளறுபடி நிலவுகிறது. கணவனால் கைவிடப்பட்ட, இதர சூழ்நிலைகளால் தனித்து விடப்பட்ட பெண்கள் தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து உயர்கல்வி கற்க முயற்சி செய்யும் போது, சாதி சான்றிதழ் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க புதுச்சேரியில் தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரசின் சரியான புரிதலின்மை காரணமாக இந்த நடைமுறை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நியாயமான தீர்ப்பு மூலம் தற்போது தாய்வழி சான்றிதழை பெற்று வருகின்றனர். இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, தகுந்த ஆதாரங்களோடு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாய்வழி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாய்வழிச் சான்றிதழ்களால் உண்மையாக இட ஒதுக்கீடு பாதிக்கப்படாத வகையில், சான்றிதழ்களை வழங்கும் முன் முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us