ADDED : ஜூன் 03, 2026 07:51 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் நகராட்சி மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு, புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், செயற்பொறியாளர் சிவபாலன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பெரிய மார்க்கெட் ‘குபேர் அங்காடி’யை நவீனப்படுத்துதல், அண்ணா திடல் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், தொகுதி முழுதும் உள்ள தெரு நாய்கள், வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய புதிய சிமென்ட் சாலைகள் மற்றும் அங்கன்வாடி கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
