/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடைக்கால நிவாரணத்தை உயர்த்த மீனவர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை
/
தடைக்கால நிவாரணத்தை உயர்த்த மீனவர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை
தடைக்கால நிவாரணத்தை உயர்த்த மீனவர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை
தடைக்கால நிவாரணத்தை உயர்த்த மீனவர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை
ADDED : மே 02, 2024 12:25 AM

புதுச்சேரி, : தடைக்கால நிவாரணத்தை உயர்த்த வேண்டும் என, மீனவர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மீனவர் சங்க கூட்டமைப் நிர்வாகிகள், தலைவர் பெரியாண்டி தலைமையில் மீன்வளத் துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணியை சந்தித்து அளித்த மனு;
தமிழகத்தில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் இன்னும் தடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நிவாரண தொகை 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரியில் தற்போது வழங்கப்படும் 6,500 ரூபாய் தடைக்கால நிவாரணத்தை, 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இதேபோல், தேர்தல் விதிகளை காட்டி மீனவர்களுக்கு முதியோர் பென்ஷன் கொடுக்கப் படாமல் உள்ளது. தேர்தல் விதிகள் சம்பளத்தையோ ஓய்வூதியத்தையோ நிறுத்தச் சொல்ல வில்லை. மீன்வளத் துறை இதுவரை ஓய்வூதியம் வழங்கவில்லை.
எனவே தேர்தல் துறையில் அனுமதி பெற்றாவது மீனவர்களுக்கான ஓய்வூதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக துறை இணை இயக்குனர் உறுதியளித்தார்.

