/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.டெக்., பி.எட்., சட்ட படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம் பொதுமக்களின் ஆலோசனைகள் வரவேற்பு

ADDED : மே 25, 2024 01:34 AM
புதுச்சேரி: பி.டெக்., பி.எட்., சட்ட படிப்புகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள படிப்புகளுக்கு கல்வி கட்டணம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படுகி றது. இதற்காக புதுச்சேரி யில் ஐகோர்ட் உத்தரவின்படி கல்வி கட்டண நிர்ணய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கல்வி கட்டண நிர்ணய குழு சில படிப்புகளுக்கான கட்டணத்தை மாற்றி அமைக்க உள்ளது.
இதற்கான ஆலோசனை உயர் கல்வித் துறை வரவேற்றுள்ளது.
இது குறித்து உயர் கல்வித் துறை இயக்குனர் அமன்சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கல்வி கட்டண குழு, தனியார், சுய நிதி கல்லுாரிகளில் உள்ள பி.டெக்.,பி.எட்., சட்ட படிப்புகளில் கல்வி கட்டணத்தை மாற்றியமைக்கப்பட உள்ளது.
இது குறித்து பொதுமக்கள், பெற்றோர் ஆலோசனைகளை உயர் கல்வி துறைக்கு dhte@dhtepdy.edu.in என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.