/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாற்றுத்திறன் மாணவர்கள் களப்பயணம்
/
அரசு பள்ளி மாற்றுத்திறன் மாணவர்கள் களப்பயணம்
ADDED : பிப் 27, 2025 06:23 AM

பாகூர்; குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலை பள்ளி, மாற்றுத்திறன் மாணவர்கள் 15 பேர்,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கள பயணம் மேற்கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு பணி ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி நோக்கவுரையாற்றினார்.
இந்த களப்பயணத்தில், புதுச்சேரி பஞ்சவடி, மணக்குள விநாயகர் கோவில், பாரதி பூங்கா, வனத்துறை அலுவலகம், ரயில் நிலையம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் உள்ளிட்ட இடங்களுக்கு, மாற்றுத்திறன் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
பயண ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன், பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் செய்திருந்தனர்.

