ADDED : மே 24, 2026 10:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தீயணைப்பு தற்காலிக டிரைவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட், அசோக் நகர் பாரதியார் சாலை வீதியைச் சேர்ந்தவர் சுரேந்தர், 29; தீயணைப்பு துறையில் தற்காலிக டிரைவர். இவர், தவணை முறையில் மினி லாரி வாங்கியிருந்தார். அதற்கு தவணை தொகை கட்ட முடியாததால் கவலையில இருந்த வந்த அவர், கடந்த 20ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
