ADDED : ஜூன் 19, 2026 06:20 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல், மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை ஆரிய நாட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது, படகில் கிள்ளை காமன் கோவில் தெரு கல்யாணசுந்தரம், 56; கடலுார் செம்மங்குப்பம் ஸ்ரீ காந்த், 25; மற்றும் பரங்கிப்பேட்டை மாதாக்கோவில் தெரு பாண்டியன், 56; ஆகிய, 3 பேர் கடந்த 15ம் தேதி மீன் பிடிக்க படகில் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துாவாரம் வழியாக கடலுக்கு சென்றனர். ஆனால் இதுவரை மூவரும் கரை திரும்பவில்லை.
இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல்போன மீனவர்களை, பரங்கிப்பேட்டை படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 10 பேர் கொண்ட குழுவினர் விசைப்படகில் கடலுக்கு சென்று, கடந்த மூன்று தினங்களாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் காணாமல் போன மூன்று மீனவர்கள் கிடைக்கும் வரை, மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல், மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
