ADDED : ஜூன் 19, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பி.எஸ்.பாளையம், பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நேற்று நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி தலைமை தாங்கி, ஓவிய போட்டியை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சசிகலா முன்னிலை வகித்தார்.
இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று யோகா தொடர்பான ஓவியங்களை வரைந்தனர். இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஓவியங்களுக்கு வரும் 21ம் தேதி பள்ளியில் நடக்கும் உலக யோகா தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் இந்துமதி, உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம், நுண்கலை ஆசிரியர் ரகுநாத் செய்திருந்தனர்.
