தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு கிருமாம்பாக்கம் அருகே பரபரப்பு

மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு கிருமாம்பாக்கம் அருகே பரபரப்பு

மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு கிருமாம்பாக்கம் அருகே பரபரப்பு


ADDED : ஜூன் 14, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மீன்பிடி வலைகள் மற்றும் சமுதாய நலக்கூட கட்டடம் தீயில் எரிந்து சேதமான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தில் கடற்கரையோரமாக அப்பகுதி மீனவர்கள் பயன் பெரும் வகையில், மீன் பிடி வலைகள் பராமரிப்பதற்காக அரசு கட்டடம் உள்ளது.

இதில், அங்குள்ள மீனவர்கள் தங்களது மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

அங்கு போதிய இடம் இல்லாத நிலையில், அங்குள்ள பழைய சமூதாய நலக்கூட கட்டடத்தில் மீனவர்கள் சிலர் வலைகளை பாதுகாத்து வைத்திருந்தனர்.

இன்றுடன், மீன்பிடி தடை காலம் முடிவடையும் நிலையில், வலைகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில், சமுதாய நலக்கூட்டத்தின் உள்ளே இருந்த மீன்பிடி வலைகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவியதால், கட்டத்தின் கதவு, ஜன்னல், மின் விசிறி உள்ளிட்ட உபகரணங்கள் தீக்கிரையானது.

தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், அதற்குள், வலைகள், சமுதாய நலக்கூடம் கட்டடம் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

இது குறித்து பனித்திட்டு மீனவ பஞ்சாயத்தார் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us