sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீன் பிடி தடைக்காலம் துவக்கம்

/

மீன் பிடி தடைக்காலம் துவக்கம்

மீன் பிடி தடைக்காலம் துவக்கம்

மீன் பிடி தடைக்காலம் துவக்கம்


ADDED : ஏப் 16, 2024 05:37 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் மீன் பிடி தடைக்காலம், நேற்று முதல் துவங்கியது.

புதுச்சேரியில் கடல்சார் மீன் வளங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்தும் வகையில், மீன் பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டிற்கான தடைக்காலம், நேற்று முதல் அமலுக்கு வந்தது.

புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனக செட்டிக்குளம் முதல், மூர்த்திக்குப்பம் - புதுக்குப்பம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்துார் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாம் மீன் பிடிப்பு பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும், வரும் ஜூன், 14ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்களுக்கு, தடை அமலில் இருக்கும்.

இதையொட்டி பாரம்பரிய மீன் பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர, அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழு வலை கொண்டு விசைப்படகில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன் பிடிப்பதுற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் பிடி துறைமுகத்தில், படகுகள் கரையோரம் நிறுத்தப்பட் டுள்ளன. இதையடுத்து, படகு களை பழுது நீக்கும் பணியை மீனவர்கள் துவங்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us