/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் துவக்கம்
/
மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் துவக்கம்
ADDED : ஏப் 15, 2024 03:30 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் (15ம் தேதி) துவங்குகிறது.
புதுச்சேரியில் கடல்சார் மீன் வளங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்தும் வகையில் பாதுகாத்திட, கடந்தாண்டுகளை போல, இந்தாண்டிலும் மீன் பிடி தடைக்கால உத்தரவு இன்று முதல் (15ம் தேதி) செயல் படுத்தப்படுகிறது.
புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனக செட்டிக்குளம் முதல், மூர்த்திக்குப்பம் - புதுக்குப்பம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்துார் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாம் மீன் பிடிப்பு பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும், இன்று முதல் வரும் ஜூன், 14ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை அமலில் இருக்கும்.
பாரம்பரிய மீன் பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர, அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழு வலை கொண்டு விசைப்படகில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன் பிடிப்பதுற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

