விருதை டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் அதிரடி ‘சஸ்பெண்ட்’
விருதை டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் அதிரடி ‘சஸ்பெண்ட்’
ADDED : ஜூலை 28, 2026 11:23 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு டாஸ்மாக் கடை ஊழியர்கள் 5 பேரை ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட மேலாளர் உத்தரவிட்டார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம், ஏனாதிமேடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.
இங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்றுள்ளனர். தட்டிகேட்ட நபரிடம், விற்பனை செய்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய விசாரணையில், மதுபானம் விற்பனை செய்தவர், டாஸ்மாக் ஊழியர் இல்லை என்பது தெரிந்தது. மேலும், அந்த கடையில் பணிபுரியும், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் வெளி நபரை பணியில் அமர்த்தியதும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, கடை மேற்பார்வையாளர்கள் மணி, மாயவேல், விற்பனையாளர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முத்துசாமி, மணிகண்டன் ஆகியோரை ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கந்தன் நேற்று உத்தரவிட்டார்.
