/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் கொடியேற்றம்
/
மணக்குள விநாயகர் கோவிலில் கொடியேற்றம்
ADDED : ஆக 11, 2024 05:18 AM

புதுச்சேரி, : மணக்குள விநாயகர் கோவிலில், 64வது ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா, விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தினசரி சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்க உள்ளன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், இசை, நாட்டியத்தில் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
தொடர்ந்து வரும் 18ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும், அடுத்த நாள், 19ம் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவம் மற்றும் பவுர்ணமி கடல் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. வரும், 19ம் தேதி சங்காபிேஷகத்தோடு, இந்த பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன், அர்ச்சகர்கள் கணேஷ் சிவாச்சார்யார், சீனுவாச குருக்கள், நாகராஜன் சிவாச்சார்யார் செய்துள்ளனர்.

