நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுளிக்கும் வகையில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
காட்டேரிக்குப்பம் கடை வீதியில் துவங்கிய போலீஸ் கொடி அணிவகுப்பு புதுநகர், காட்டேரிக்குப்பம் காலனி, மருத்துவமனை வீதி, திரவுபதியம்மன் கோவில் வீதி, லிங்காரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

