ADDED : மார் 08, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உப்பளம் தொகுதி, தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.
பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்றார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மாணவர்கள் தயார் செய்த சிறுதானிய உணவுகளை பார்வையிட்டார். உணவு திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும், முன் மழலையர் மாணவர்களின் கற்றல் திருவிழாவில், மாணவர்களின் கற்றல் திறனை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சிறுதானிய உணவுகளான வரகு பொங்கல், கேழ்வரகு கூழ், கேழ்வரகு அடை, கேழ்வரகு பக்கோடா, சோளதோசை, தினைப் பாயாசம், சாமை பொங்கல், கம்பு சோறு, சிறுதானிய குழிப்பணியாரம், கேழ்வரகு களி உள்ளிட்ட வகைகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தினர்.
ஆசிரியை மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.