/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயிரிழந்த நாய்க்கு, 7ம் நாள் காரியம்: புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்
/
உயிரிழந்த நாய்க்கு, 7ம் நாள் காரியம்: புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்
உயிரிழந்த நாய்க்கு, 7ம் நாள் காரியம்: புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்
உயிரிழந்த நாய்க்கு, 7ம் நாள் காரியம்: புதுச்சேரியில் நெகிழ்ச்சி சம்பவம்
ADDED : மே 22, 2024 07:03 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உயிரிழந்த செல்ல நாயை வீட்டிலேயே அடக்கம் செய்து, அதற்கு, 7ம் நாள் காரியம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014ல், நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி, அதற்கு 'ரேம்போ' என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாயை, தனது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே, செல்லமாக வளர்த்து வந்தார்.
அதற்கு என்னென்ன தேவையோ, அதையெல்லாம் தேடித்தேடி வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த நாய் திடீரென உயிரிழந்தது. நாய் இறந்து போனதை ஆடுத்து, மதி மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில், தனது நாய் 'ரேம்போ' இறந்ததை ஊர் முழுக்க தெரியப்படுத்த வேண்டும் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டரை புதுச்சேரி முழுவதும் ஒட்டினர். வீட்டின் முன் பந்தல் அமைத்து, சவப்பெட்டியில் அந்த நாயின் உடல் வைக்கப்பட்டது. இந்த தகவலை கேள்விப்பட்ட மதியின் உறவினர்கள், மாலையுடன் வந்து, நாயின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அந்த நாய் 'ரேம்போ' மதியின் வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த நாய்க்கு, ௭ம் நாள் சடங்கை மதியின் குடும்பத்தார் செய்தனர். அந்த நாய்க்கு பிடித்த உணவுகளை வைத்து வழிபட்டனர்.

