/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பை டெண்டரில் பல கோடி கைமாறி உள்ளது மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
/
குப்பை டெண்டரில் பல கோடி கைமாறி உள்ளது மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
குப்பை டெண்டரில் பல கோடி கைமாறி உள்ளது மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
குப்பை டெண்டரில் பல கோடி கைமாறி உள்ளது மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ADDED : மே 26, 2024 05:02 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் குப்பை அள்ளும் டென்டரில் பல கோடி கைமாறி உள்ளதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
அவர் கூறியதாவது;
பா.ஜ., 200 இடங்களில் கூட வெற்றி பெறாது. தமிழகம், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும். பா.ஜ., அ.தி.மு.க., படுதோல்வி அடையும்.
திருவள்ளுவர் படத்திற்கு, கவர்னர் ரவி காவி சாயம் பூசி, தான் ஒரு சங்கி என நிருபித்துள்ளார். தமிழக மக்கள் மனநிலை புரியாமல், ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை புகுத்த பார்க்கிறார்.
எந்த கட்சியும் சேராதவராக இருக்க வேண்டிய கவர்னர், பா.ஜ., கை கூலியாக இருப்பது வேதனை அளிக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்து 3 மாதத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்.
புதுச்சேரி பொறுப்பு கவர்னர் ராதாகிருஷ்ணன், ஏற்கனவே இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை போல அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.
கஞ்சா விஷயத்தில் தலையிடுவது வரவேற்க தக்கது. அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
குப்பை அள்ளும் டெண்டரில்கோடிக்கணக்கான பணம் கைமாறி உள்ளது.டெண்டர் விடுத்தவர்கள் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கா மல், ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் பெற்று குறைந்த சம்பளம் வழங்கி கொள்ளை அடிக்கின்றனர்.
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு, ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இ.சி.ஆரில் சிவாஜி சிலையில் இருந்து முருகா தியேட்டர் வரை மேம்பாலம் அமைக்க போடப்பட்ட திட்டம்கிடப்பில் கிடக்கிறது. இவ்வாறு அவர், கூறினார்.