/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலுக்கு பின் என்.ஆர்.காங்., ஆட்சிபா.ஜ.,வினரால்கவிழ்க்கப்படும் மாஜி முதல்வர் நாராயணசாமி 'திடுக்'

ADDED : ஏப் 03, 2024 03:12 AM
புதுச்சேரி : 'லோக்சபா தேர்தலுக்கு பின் என்.ஆர்.,காங்., ஆட்சி, பா.ஜ., வினரால் பறிக்கப்படும்' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.
இண்டியா கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமராவார். அருணாச்சல பிரதேசத்தில், இந்தியாவின் எல்லையை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் கேட்டோம். அதற்கு பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
இந்தியா நிலத்தை மீட்க முடியாத மோடி, கச்சத் தீவைப்பற்றி பேச தகுதில்லை. காங்., ஆட்சியில் மத்திய அமைச்சராக நான் இருந்த போது, இலங்கை அரசால், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை 24 மணி நேரத்தில் மீட்டு கொடுத்தோம்.
பிரதமர் மோடி இலங்கை அரசுடன் நல்ல உறவுடன் தான் இருக்கிறார். மீனவர்கள் பிரச்னையை அவரால் தீர்க்க முடியவில்லை. லோசபா தேர்தலுக்கு பின் என்.ஆர்.காங்., ஆட்சி, பா.ஜ.,வினரால் பறிக்கப்படும். புதுச்சேரியில் என்.ஆர்., காங்., ஆட்சி கவிழ்க்கப்படும்.
இவ்வாறு அவர், பேசினார்.