/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்சி நிர்வாகம் அதிகாரிகள் கையில் உள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
/
ஆட்சி நிர்வாகம் அதிகாரிகள் கையில் உள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ஆட்சி நிர்வாகம் அதிகாரிகள் கையில் உள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ஆட்சி நிர்வாகம் அதிகாரிகள் கையில் உள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ADDED : செப் 01, 2024 03:56 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆட்சி நிர்வாகம் முதல்வர், அமைச்சரின் கையில் இல்லாமல், அதிகாரிகளின் கையில் உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில் சாதி வாரியாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார். ஆனால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மவுனம் காக்கிறார்.
மின் கட்டணத்தை ஜூன் மாதத்தில் இருந்து, மீண்டும் அமல்படுத்தினால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இதனை கண்டித்து, இண்டியா கூட்டணி சார்பில் போராட்டங்களை அறிவித்துள்ளோம். இதன் மூலம் மின் கட்டண உயர்வை நிறுத்துவதாக முதல்வரும், அமைச்சரும் கூறிய வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சியில், சொல்வது ஒன்றும் செய்வதும் ஒன்றுமாக உள்ளது. இதன் மூலம் நிர்வாகம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கையில் இல்லை. அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது என்பது தெரிகிறது.
சுற்றுலா பயணிகளிடமே ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். இது முதல்வருக்கும், அமைச்சருக்கும் தெரியும். இது தொடர்பாக புதிய டி.ஜி.பி., நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
துறைமுக துறைக்கு சொந்தமான இடத்தில், இறந்த ஒட்டகம் அனுமதி இன்றி புதைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை, நகராட்சி, துறைமுகத்துறை ஆகிய துறைகளின் அனுமதி இன்றி விதிகளை மீறி, பாண்டி மெரினா கடற்கரையில் கொள்ளை அடித்து வருகின்றனர். இதனை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.