/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களை ஏமாற்றும் 'பட்ஜெட்' மாஜி முதல்வர் கருத்து
/
மக்களை ஏமாற்றும் 'பட்ஜெட்' மாஜி முதல்வர் கருத்து
ADDED : மார் 13, 2025 06:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது என, பட்ஜெட் குறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது;
முதல்வர் ரங்கசாமி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தியது.
தாய், தந்தையை இழந்து அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகை, அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கும் அம்சங்கள் பாராட்டுக்குறியது.
இதை தவிர இந்த பட்ஜெட்டில் எந்த திட்டங்களும் இல்லை. மொத்தம் 13, 600 கோடி பட்ஜெட்டில் 70 சதவீதம் தொகை சம்பளம், ஓய்வூதியம், மானியம் போக, 30 சதவீத தொகைதான் வளர்ச்சி பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மாநில வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இல்லை. புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. முதல்வர் ஏற்கனவே பல திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று காரைக்காலில் அரசு மருத்துவ கல்லுாரி ஆரம்பிக்கப்படும் என்பது.
அதற்காக ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. பெண்களுக்கு இலவச பஸ், காஸ் மானியம், முதியோர் உதவித்தொகை காலத்தோடு வழங்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் அரைகுறையாக உள்ளது. இது புதுச்சேரி மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.