ADDED : ஏப் 21, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், இடையான்சாவடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கோதண்டம், 73; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், இவரை மனைவி பரிமளாதேவி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கோதண்டம் நேற்று மதியம் மீண்டும் குடித்துவிட்டு அவரது அறையில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

