/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள்; காங்., அலுவலகத்தில் அஞ்சலி
/
முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள்; காங்., அலுவலகத்தில் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள்; காங்., அலுவலகத்தில் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள்; காங்., அலுவலகத்தில் அஞ்சலி
ADDED : மே 22, 2024 01:05 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு அஞ்சலி கூட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநில காங்., அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், அரசு மருத்துவமனையில் இரத்ததானம் முகாம் நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பின் ராஜிவ் சிக்னலில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணை அமைப்பாளர் தேவதாஸ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், விஜயவேணி, காங்., மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர் காங்., தலைவர்கள், நிர்வாகிகள், மாணவர் காங்., தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

