முத்திரையர்பாளையம் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
முத்திரையர்பாளையம் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
ADDED : ஆக 03, 2026 08:13 PM
புதுச்சேரி: புதுச்சேரி, முத்திரப்பாளையத்தில் உள்ள அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இப்பள்ளியில் கடந்த 2003ம் ஆண்டு கல்வியாண்டில் பயின்று, 23 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பள்ளியில் மீண்டும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயசூர்யா, 20க்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்கள் அனிதா, கமலபாய், லட்சுமி காந்தம், சிவசங்கரி, சாந்தி, லோகேஸ்வரி, விஜயா, சுலோசனா, திலகவதி, ராமநாதன், ஜெயபால், மணிமொழி, வெல்விழியன், சிவ கணபதி, வைத்தியநாதன், பெருமாள் (உடற்கல்வி), அண்ணாமலை உள்ளிட்ட கலந்து கொண்டனர். வகுப்பறைகள், மைதானங்கள் மற்றும் அன்றாடம் குறும்பு செய்த நாட்களை ஆசிரியர்களுடன் முன்னாள் மாணவிகள் பகிர்ந்துகொண்டனர். முன்னதாக பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் சார்பில் 10 நாற்காலி மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கினர்.
