/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் இன்ஜினியரிடம் ரூ.1.04 லட்சம் மோசடி
/
பெண் இன்ஜினியரிடம் ரூ.1.04 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 09, 2024 03:10 AM
விழுப்புரம், : பெண் இன்ஜினியரிடம் ரூ.1.04 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த மானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் லுார்து சேவியர் மகள் நிவேதிதா,24; இன்ஜினியர்.
இவருக்கு, சென்னையில் வசிக்க வீடு தேவைப்பட்டதால் அதற்கான ஒரு 'ஆப்'பில் சென்று தேடினார். அதில் இருந்த ஒரு மொபைல் எண்ணை நேற்று முன்தினம் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் பேசியவர், தான் ராணுவத்தில் பெங்களூருவில் பணி செய்வதாக கூறி, மேலாளரை தொடர்பு கொள்ளுமாறு கூறி ஒரு மொபைல் எண்ணை அனுப்பியுள்ளார்.
அந்த எண்ணுக்கு நிவேதிதா தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் அனுப்பிய கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ரூ.1,000 அனுப்பினார். பின்னர் வீட்டின் உரிமையாளர் கூறியதன் பேரில் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1.04 லட்சத்தை அனுப்பினார்.
அதன்பிறகு அந்த நபர் பணத்தை தராமல் மேலும் பணம் கேட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிவேதிதா விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.