/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தபால் மூலம் பரிசு கூப்பன் அனுப்பி மோசடி சைபர் கிரைம் கும்பல் ரூ. 5 லட்சம் 'அபேஸ்'

ADDED : ஆக 25, 2024 11:40 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தபால் மூலம் பரிசு கூப்பன் அனுப்பியும், பகுதி நேர வேலை என கூறி, 3 பேரிடம் 5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் மோசடி செய்தனர்.
புதுச்சேரி தொண்டமாநத்தம், புது காலனியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரை டெலிகிராமில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதனை நம்பிய பிரபாகரன் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 3.72 லட்சம் ரூபாய் செலுத்தி டாஸ்க்குகளை முடித்தார்.
ஆனால் செலுத்திய தொகை மற்றும் ஆன்லைன் வேலை மூலம் சம்பாதித்த தொகையை எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டார்.
பவழ நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார் வீட்டிற்கு ரூ. 14 லட்சம் பரிசு விழுந்துள்ளாக தபால் மூலம் பரிசு கூப்பன் வீட்டிற்கு வந்தது. பரிசு கூப்பனில் இருந்த நம்பரை தொடர்பு கொண்டு விசாரித்தார். பரிசு தொகையை பெற சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி ரூ. 58 ஆயிரம் பணம் செலுத்தி ஏமாந்தார்.
ஏனாம் கலிசந்துபிரியாவை தொடர்பு கொண்ட மர்ம நபர் ராணுவத்தில் இருந்து பேசுவதாகவும், ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பளம் வழங்குவதற்கு வங்கி தகவல்களையும், பண பரிவர்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார்.
இதை நம்பி கலிசந்துபிரியா ரூ. 77 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.