தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேதபாரதி சார்பில் 2ம் தேதி இலவச மருத்துவ முகாம்

வேதபாரதி சார்பில் 2ம் தேதி இலவச மருத்துவ முகாம்

வேதபாரதி சார்பில் 2ம் தேதி இலவச மருத்துவ முகாம்


ADDED : ஜூலை 23, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி சார்பில் வரும் 2ம் தேதி இலவச ஆயுர்வேதா மருத்துவ முகாம் நடக்கிறது.

புதுச்சேரியில் இயங்கி வரும் பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் 2ம் தேதி கருவடிக்குப்பம் இ.சி.ஆரில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் காலை 8:30 மணிக்கு இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.

முகாமில், சென்னை பூந்தமல்லி ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரியின் அனைத்து துறை சார்ந்த டாக்டர்கள் வருகை தந்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகின்றனர்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர் 98426 07476, 94431 03404, 98942 55649 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us