தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜந்தர்மந்தர் போராட்டத்தில் போலீசார் தாக்குதல்: சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

ஜந்தர்மந்தர் போராட்டத்தில் போலீசார் தாக்குதல்: சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

ஜந்தர்மந்தர் போராட்டத்தில் போலீசார் தாக்குதல்: சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 23, 2026 07:13 PM

ADDED : ஜூலை 23, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 07:13 PM ADDED : ஜூலை 23, 2026 07:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜந்தர்மந்தர் போராட்டத்தில், போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அகில இந்திய காங்., இணை செயலாளர் பலக்வர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், புதுச்சேரி காங்., அலுவலகத்தில் கூறியதாவது:

நீட் வினாத்தாள் கசிவு குறித்து அமைதியாக ஜந்தர்மந்தர் பகுதியில், போராடிய மாணவர்கள் மீது, கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு, தடியடி உள்ளிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது.

இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு இரண்டு முறை நடத்துள்ளது. இரண்டு தேர்விற்கும் நடுவில், நாம் 21 மாணவர்களை இழந்துள்ளோம். மாணவர்கள் நீட் தேர்விற்காக 18 மணி நேரம் படித்து வருகின்றனர்.

ராகுல் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பாதாரோடு, உரையாடும் போது, 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை தேர்விற்கு தயாராக செலவு செய்வதாக தெரிவித்தனர். வினாத்தாள் கசிவின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக, செய்திதாள்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய வினாத்தாள் கசிவை தடுக்க வேண்டும்.

மாணவர்கள் 2022ம் ஆண்டு நீட் தேர்வின் போது கடுமையான சோதனைக்கு உள்ளாகினர். ஆனால் வெளிப்படையாக செயல்படும் வினாத்தாள் கசிவு மாபியாக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

வினாத்தாள் கசிவு குறித்து பார்லிமெண்ட்டில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என, பிரதமர் இல்லம் நோக்கி பேரணி சென்ற எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்வி கட்டமைப்பை சிதைத்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். நடுத்தர ஏழைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜந்தர்மந்தர் போராட்டத்தில், போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us