/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோ ஆபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் பதவிக்கான இலவச மாதிரி தேர்வு
/
கோ ஆபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் பதவிக்கான இலவச மாதிரி தேர்வு
கோ ஆபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் பதவிக்கான இலவச மாதிரி தேர்வு
கோ ஆபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் பதவிக்கான இலவச மாதிரி தேர்வு
ADDED : மே 06, 2024 05:29 AM

புதுச்சேரி, : ஜூனியர் கோ ஆபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு நடப்பதையொட்டி, பிரில்லியன்ட் இன்ஸ்டியூட் நிறுவனம் இலவச மாதிரி தேர்வை நடத்தியது.
புதுச்சேரியில் அரசு ஜூனியர் கோ ஆபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு நேரடி போட்டி தேர்வு வரும் ஜூன் 30ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி, பிரில்லியன்ட் இன்ஸ்டியூட் நிறுவனம் சார்பில், இளைஞர்களுக்கு இலவச மாதிரி தேர்வை சபரி வித்யாஷ்ரம் பள்ளியில் நேற்று நடந்தது.
இத்தேர்வு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி ஐ.ஆர்.பி., துணை கமாண்டன்ட் முருகவேல், போலீஸ் கண்காணிப்பாளர் நல்லாம் கிருஷ்ணராய பாபு மாணவர்களுக்கு கேள்வித் தாள்களை வழங்கி, இலவச மாதிரி தேர்வினை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பிரில்லியன்ட் இன்ஸ்டியூட்டின் நிறுவனர்கள் நெடுஞ்செழியன், ஸ்ரீதரன், குமார், அபிராமி, சபரி வித்யாஷ்ரம் உயர்நிலைப் பள்ளி தாளாளர் அமுதவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இத்தேர்வினை மாணவர்களுக்கு வரும் ஜூன் 30ம் தேதி வரை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளது. இதில், தேர்வு எழுத உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
பிரில்லியன்ட் இன்ஸ்டிட்யூட் வழங்கும் மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள், 8220899996 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.