ADDED : ஜூலை 14, 2026 11:02 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு தூதரகம் சார்பில் பிரெஞ்சு தேசிய தினம் விழா பிரெஞ்சு துாதரகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் சிவக்கொழுந்து, புதுச்சேரிக்கான பிரெஞ்சு துாதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிரெஞ்சு துாதரகம் முன்பு இரவு வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெளிநாடு, வெளி மாநிலம், உள்ளூர் என திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
