ADDED : ஜூலை 14, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: ஊசுடு தொகுதி பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ஊசுடு தொகுதியை சேர்ந்த முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி பொறையூர் மற்றும் அகரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று முதியோர்களுக்கு இலவச போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தொகுதி காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
