/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நன்னீர் மீன் வளர்ப்போர் ஆலோசனைக் கூட்டம்
/
நன்னீர் மீன் வளர்ப்போர் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 04, 2024 07:44 AM

பாகூர், : பாரதிதாசன் நன்னீர் மீன் வளர்போர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், பங்குதாரர்கள் ஆலோசனை கூட்டம், முள்ளோடையில் நடந்தது.
மத்திய அரசின் தேசிய மீன் வள பணியகம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் தலைவர் ஆதிமூலம் வரவேற்றார். புதுச்சேரி மீன்வளத்துறை இணை இயக்குனர் சவுந்திரபாண்டி தலைமை தாங்கினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மீன்வள திட்ட பிரிவு இயக்குனர் வேல்விழி முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி வேளாண்துறை இணை இயக்குனர் ஜோசப் ஆல்பர்ட், இந்தியன் வங்கி கரையாம்புத்துார் கிளை மேலாளர் சயோபஜன் யாதவ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில், நிறுவனத்தின் வரவு - செலவுகள், எதிர்கால திட்டங்கள், தொழில் வணிக மேம்பாடு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, பங்குதாரர்களுக்கு, பங்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கிரிஜா, செல்வராசு, பாரதிதாசன் நன்னீர் மீன்வளர்போர் உற்பத்தியாளர் நிறுவன கவுரவ தலைவர் கலியமூர்த்தி, செயல் அலுவலர் எழில்வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். இயக்குனர் தேவேந்திரன் நன்றி கூறினார்.