/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாசி மக தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை
/
மாசி மக தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை
மாசி மக தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை
மாசி மக தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை
ADDED : மார் 05, 2025 04:33 AM
புதுச்சேரி:மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு புதுச்சேரிக்கு வரும், சாமிகளுக்கு, சாரம் அவ்வை திடலில் கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரியில், மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு, செஞ்சி அரங்கநாதர், மயிலம் சுப்ரமணிய சாமி, மேல்மலையனுார் அங்காளம்மன், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் ஆகிய சாமிகள் கடல் தீர்த்தவாரியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அதையடுத்து, தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு, வரும் 13ம் தேதி, சாரத்தில் உள்ள மாசி மகம் வரவேற்பு குழு சார்பில், அவ்வை திடலில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து, சாரம் நடுத்தெருவில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர் சாமி தங்குகிறார். வரும் 17ம் தேதி, சங்கட சதுர்த்தி அன்று, காலை 9:00 மணியளவில், சித்தி, புத்தி விநாயகருக்கு கணபதி ஹோமம்,108 சங்காபிேஷகம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து, திருமண யோகத்திற்கான மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு விநாயகர் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள், 18ம் தேதி, தீபாரதனையுடன், தீர்த்தவாரிக்கு வந்த சாமிகளுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, சாரம் மாசி மக வரவேற்பு குழுவினர் செய்து வருகின்றனர்.