வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் ‘ஜப்தி’ முயற்சியால் ‘பரபரப்பு’
வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் ‘ஜப்தி’ முயற்சியால் ‘பரபரப்பு’
ADDED : ஆக 10, 2026 09:45 PM

புதுச்சேரி: புதுச்சேரி வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி முயற்சி நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ரெயின்போ நகரில் 49 குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதல் தொகையான ரூ.80 லட்சம் வழங்காத புதுச்சேரி வீட்டுவசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்வதற்காக நேற்று நெல்லித்தோப்பில் உள்ள அலுலகத்திற்கு அமீனாக்கள் வந்தனர்.
கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தொகையை வழங்க உத்தரவிட்டும் வாரியம் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி கோதண்டராஜ், வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையொட்டி, அமீனாக்கள் ஜெய் அம்பி தலைமையில் ஜப்தி நடவடிக்கைக்கு வந்தனர். இது தொடர்பாக வீட்டு வசதிவாரிய செயற்பொறியாளர் அன்புமணியோடு, அமீனாக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
