தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டாக் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை: 2ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு

சென்டாக் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை: 2ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு

சென்டாக் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை: 2ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு


UPDATED : ஆக 10, 2026 10:10 PM

ADDED : ஆக 10, 2026 09:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 10:10 PM ADDED : ஆக 10, 2026 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கு சென்டாக் கணினி கலந்தாய்வு நடத்தி, 2ம் கட்ட வரைவு பட்டியல் வெளியிட்டுள்ளது.

பி.டெக்.,நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான(லேட்ரல் என்ட்ரி) புதுப்பிக்கப்பட்ட இறுதி தரவரிசைப் பட்டியல் மற்றும் 2ம் கட்ட வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பித்த மாணவர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் தங்கள் லாக்-இன் முகவரி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இந்த வரைவு ஒதுக்கீட்டில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் தங்கள் லாக்-கின் பக்கத்தில் உள்ள குறைசொல்லும் பகுதி மூலம் மூலம் இன்று 11ம் தேதி காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்பட்ட பின்னர், 2ம் கட்ட தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் ஒதுக்கீட்டு ஆணையை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியான பிறகு மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிக்கு நேரில் சென்று அசல் சான்றிதழ்கள் மற்றும் உரிய கட்டணம் செலுத்தி சேரலாம். கல்லுாரியில் வரும் 17ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு ஒதுக்கீட்டுப் பட்டியல் வழிகாட்டுதல் மட்டுமே ஆகும்.

இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதன் அடிப்படையில் சட்டப்பூர்வ உரிமையோ அல்லது கோரிக்கையோ கோர முடியாது. தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியாகி, ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்த பின்னரே மாணவர்கள் கல்லுாரிகளை அணுக என, சென்டாக் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்கள், கட்டண விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளம் அல்லது 0413-2655570 அல்லது 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us