UPDATED : ஆக 10, 2026 10:12 PM
ADDED : ஆக 10, 2026 09:45 PM
பயனுள்ள கண்காட்சி அனைவரும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கக்கூடிய இன்றைய காலச் சூழ்நிலையில், 'தினமலர்' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடத்துவது வரவேற்கத்தக்கது. நான் வந்து பார்த்தபோது, வெளியில் கிடைக்காத பல பொருட்கள் இங்கு இருப்பது தெரிய வந்தது. கண்காட்சியில் இடம் பெற்ற அனைத்து பொருட்களும் பயனுள்ளவையாக உள்ளது. இந்த கண்காட்சியில், பொருட்களை நேரில் வந்து பார்த்து வாங்கும் வகையில் உள்ளது. 'தினமலர்' நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.
செந்தில்குமார், எம்.எல்.ஏ.,
பாகூர், புதுச்சேரி.
தினமலருக்கு வாழ்த்துக்கள் 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள், இங்கு விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
உடல், மனம் மற்றும் வாழ்க்கைக்கு கு தேவையான அனைத்து பொருட்களும் இங்க கிடைக்கிறது. மக்கள், பார்வையிட்டு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி பயன்பெறுகின்றனர். இப்படி ஒரு சிறப்பான கண்காட்சியை நடத்தும் 'தினமலர்' நிர்வாகத்திற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் என்றார்.
செல்வம்,
முன்னாள் சபாநாயகர், புதுச்சேரி.
இல்லாத பொருளே இல்லை 'தினமலர்' நிறுவனம் ஆண்டுதோறும் பொதுமக்கள் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் எக்ஸ்போவை நடத்தி வருகிறது. இங்கு இல்லாத பொருளே இல்லை. இந்தியாவில் அப்டேட்டான புதிய வகையான பொருட்கள் குறைந்த விலையில், தரமாக கிடைக்கிறது.
தினமலர் எக்ஸ்போ எப்போது நடத்துவார்கள் என பொதுமக்கள் ஆண்டுதோறும் காத்திருக்கின்றனர். எக்ஸ்போ பிரம்மாண்டமாக உள்ளது. தினமலர் லாப நோக்கம் இல்லாமல் எக்ஸ்போவை சேவையாக செய்து வருகின்றது. யாரும் செய்யாத செயலை செய்யும் தினமலர் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.
ராமலிங்கம்,
பா.ஜ., மாநில தலைவர், புதுச்சேரி
