/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 12, 2024 05:16 AM

புதுச்சேரி: இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் இ.சி.ஆர் சங்கரவித்யாலயா பள்ளியில் நடந்தது.
பேரவை தலைவர் குமரகுரு தலைமை தாங்கினார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சாரம் அவ்வை திடலில் 27 அடி சிலை பிரதிஷ்டை செய்து, செப்டம்பர் 7ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தி விமர்சையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
11ம் தேதி புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கடற்கரையில் விசர்ஜனம் செய்வது என, தீர்மானிக்கப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குமேல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் எளிதில் கரையக்கூடிய பொருட்களால் செய்து வழிபட வேண்டும்.
விநாயகர் ஊர்வலம் விதிமுறைகளை உட்பட்டு நடத்த வேண்டும். பக்தர்கள் வீட்டில் பூஜித்த விநாயகர் சிலைகளை தாங்களே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.
பேரவையின் பொதுச் செயலாளர் சனில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.