/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
/
காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம்
ADDED : செப் 10, 2024 06:52 AM

காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 54 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 6 தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
3நாட்கள் பூஜைகளுக்கு பின் நேற்று விநாயகர் சிலைகளை கடலில் விஜர்சனம் செய்ய மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் ஏழை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சக்தி விநாயகர் நகர்வலத்தை பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராஜசேகரன் துவக்கி வைத்தார். பின் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பாரதியார்சாலை.பெரியபேட், காமராஜர் சாலை வழியாக கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள நடுக்கடலில் அனைத்து விநாயகர்சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.
முன்னதாக இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ். நகர தலைவர் ராஜ்குமார் வரவேற்றானர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில துணை தலைவர்கள் அருள்முருகன், நளினி, மீனாட்சிசுந்தரம்,விஜயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எஸ்.பி. சுப்ரமணியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் லெனின் பாரதி. புருஷோத்தமன். செந்தில்குமார். கிரிஸ்டிபால் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.