/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு சிறைக்குள் கஞ்சா, 5 மொபைல்போன் பார்சல் வீச்சு
/
காலாப்பட்டு சிறைக்குள் கஞ்சா, 5 மொபைல்போன் பார்சல் வீச்சு
காலாப்பட்டு சிறைக்குள் கஞ்சா, 5 மொபைல்போன் பார்சல் வீச்சு
காலாப்பட்டு சிறைக்குள் கஞ்சா, 5 மொபைல்போன் பார்சல் வீச்சு
ADDED : மார் 30, 2024 07:00 AM

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா, 5 மொபைல்போன் அடங்கிய பார்சல் கண்டெடுக்கப்பட்டது.
புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, மொபைல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத மாமூல் வசூலித்து வருகின்றனர். இந்த வசூல் பணிகளை இரண்டாம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.
இதனை தடுப்பதிற்காக சிறையில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை சிறை வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே சுத்தம் செய்யும் பணியின்போது ஒரு பார்சல் கிடந்தது.
அதனை கண்டுபிடித்த சிறை காவலர்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆன்ட்ராய்டு மொபைல் உட்பட 5 மொபைல்போன், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா, 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. இதனால் சிறை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை பறிமுதல் செய்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தார். சிறையில் உள்ள எந்த ரவுடிக்காக கஞ்சா, மொபைல்போன்கள் வீசப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

