/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆவணி அவிட்டத்தையொட்டி 20ம் தேதி காயத்திரி மகா யாகம்
/
ஆவணி அவிட்டத்தையொட்டி 20ம் தேதி காயத்திரி மகா யாகம்
ஆவணி அவிட்டத்தையொட்டி 20ம் தேதி காயத்திரி மகா யாகம்
ஆவணி அவிட்டத்தையொட்டி 20ம் தேதி காயத்திரி மகா யாகம்
ADDED : ஆக 18, 2024 04:16 AM
புதுச்சேரி, : ஆர்ய வைஸ்ய ஆன்மிகக் குழு சார்பில், காயத்திரி ஜபம் மற்றும் மகா யாகம் வரும் 20ம் தேதி புதுச்சேரியில் நடக்கிறது.
புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன், அறவோர் முன்னேற்றக் கழகம், சிவசுப்ரமணியர் வேத ஆகம பாடசாலை மற்றும் காரைக்கால் பிராமண சமாஜம் இணைந்து, ஆர்ய வைஸ்ய ஆன்மிக குழு சார்பில், ஆவணி அவிட்டத்தையொட்டி, வரும் 20ம் தேதி 4ம் ஆண்டு, சமஷ்டி, ரிக் யஜூர் உபாகர்மா மற்றும் காயத்ரி மகா யாகம் லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் சின்மயா சூர்யா மஹாலில் நடக்கிறது.
இந்நிகழ்ச்சியையொட்டி, நாளை காலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை, சூரிய பூஜை, கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 1:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பிரிவு வீதம் உபகர்மா நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி காலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை காயத்திரி ஜபம், மகா யாகம் நடக்கிறது.
மேலும், தொடர்புக்கு, தலைவர் ராகவேந்திர சிவம், 81899 55014, செயலாளர் ரமேஷ் 98940 60193 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

