ADDED : மார் 26, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழாவை முன்னிட்டு செல்லிப்பட்டு அங்கன்வாடி மையத்தில் நடந்த விழாவிற்கு, மருத்துவ அதிகாரி குணசீலன் தலைமை தாங்கினார்.
விழாவில், குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற எடை, காலத்தோடு தடுப்பூசி போடுதல் மற்றும் தாய்ப்பால் மட்டும் அருந்திய குழந்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆரோக்கிய குழந்தை போட்டிகள் நடந்தி பரிசு வழங்கப்பட்டது.
இதில் அங்கன்வாடி மைய ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

