/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு வாய்ப்பூட்டு
/
ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு வாய்ப்பூட்டு
ADDED : மார் 09, 2025 03:31 AM
புதுச்சேரியில் ஐ.ஆர்.பி.என்., பிரிவு கடந்த 2005ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஆட்கள் தேர்வுக்கு பிறகு புதிய நியமனங்கள் நடக்கவில்லை. ஐ.ஆர்.பி.என்., துறை ரீதியாக பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது.
ஐ.ஆர்.பி.என்., உதவி கமாண்டன்ட்கள் பைனான்ஸ் தொழில் செய்வதும், ஐ.ஆர்.பி.என்., காவலர்களை கொண்டு டீ கடை நடத்தி வரும் தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
அதையடுத்து, 2 உதவி கமாண்டன்ட்கள் ஏனாம், மாகிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். வி.ஐ.பி.,க்கள் வீடு பாதுகாப்பு, ஆடர்லி முறையில் பணிக்கு சென்ற பல ஐ.ஆர்.பி.என்.,கள் தினசரி உடற்பயிற்சி இன்றி தொப்பையுடன் உலா வந்தனர். ஐ.ஆர்.பி.என்., உடல் நலனில் அக்கறை கொண்ட டி.ஜி.பி., வாரந்தோறும் அணிவகுப்பு நடைபயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சட்டம் ஒழுங்கு போலீசாருடன் ஐ.ஆர்.பி.என்., அணிவகுப்பு நடைபயிற்சி செய்து வருகின்றனர். ஐ.ஆர்.பி.என்., பிரிவில் நடக்கும் முறைகேடுகள், உயர் அதிகாரிகளின் அத்துமீறல்களை அங்கு பணியாற்றும் ஐ.ஆர்.பி.என்., காவலர்கள் உடனுக்குடன் தகவல்களை வெளியே தெரிவித்து விடுவதால், ஐ.ஆர்.பி.என்., காவலர்களுக்கு பத்திரிக்கையாளர்களுடன் பேச வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.பி.என்., பிரிவில் நடக்கும் எந்த விஷயமும் வெளியில் கூற கூடாது.
யாரேனும் தகவல் கேட்டால், உயர் அதிகாரிகளிடம் மட்டுமே பெற வேண்டும் என கூறி விட வேண்டும். எதுவும் பேச கூடாது என ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.