sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

/

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

4


ADDED : ஜன 11, 2026 04:51 PM

Google News

ADDED : ஜன 11, 2026 04:51 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, போலீசாரை ஏவி அச்சுறுத்துவதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை; கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோத போக்குக்கு எடுத்துக்காட்டு.

ஆட்சிக்கு வருவதற்கு முன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என திமுக கொடுத்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துகிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் குரலை அடக்கலாம் என்று நினைப்பது வெட்கக்கேடு. ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி.

உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us