/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜி.என். பாளையம் எழில் நகரில் இணைப்புசாலை அமைக்க ஆய்வு
/
ஜி.என். பாளையம் எழில் நகரில் இணைப்புசாலை அமைக்க ஆய்வு
ஜி.என். பாளையம் எழில் நகரில் இணைப்புசாலை அமைக்க ஆய்வு
ஜி.என். பாளையம் எழில் நகரில் இணைப்புசாலை அமைக்க ஆய்வு
ADDED : பிப் 25, 2025 04:53 AM

வில்லியனுார்: ஜி.என். பாளையம்எழில் நகர்-அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் இணைப்பு சாலை பணி குறித்து, கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
வில்லியனுார் தொகுதி, ஜி.என். பாளையம் எழில் நகரையும், அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரையும் இணைக்கும் வகையில், தனியாரிடம் உள்ள 400 சதுரடி நிலத்தை அரசு கையகப்படுத்தி, அதில் இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, சுற்றுவட்டார புதிய நகர் பகுதியை பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் சிவா,கலெக்டர் குலோத்துங்கன், தாசில்தார் சேகர்மற்றும் அதிகாரிகள் குழு, நேற்று எழில் நகர்-திருக்குறளார் நகரை இணைக்கும் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம், இங்கு இணைப்பு சாலைக்கு தேவையான இடத்தை, அரசு கையகப்படுத்தி சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
ஆய்வின்போது, வில்லியனுார் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நகர குழும உறுப்பினர் செயலர் புவனேஷ்வரன், இளநிலை பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் ராமசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

