தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்

நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்

நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த அமைச்சர்


ADDED : மார் 26, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் களம் இறங்கி உள்ளார்.

வேட்பு மனு செய்வதிற்கு முன்னதாக நேற்று காலை கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவில், திலாஸ்பேட்டை அப்பா பைத்தியம் சுவாமி கோவிலிலும், கதிர்காமம் முருகன் கோவிலில் முதல்வர் ரங்கசாமியுடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்பு காலை 11:55 மணிக்கு கதிர்காமம் கோவிலில் இருந்து முதல்வர் ரங்கசாமியின் காரில் அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., பொறுப்பாளர் சுரானா ஆகியோர் புறப்பட்டனர். வழுதாவூர் சாலை முழுதும் தொண்டர்கள் சூழ்ந்து இருந்ததால், ஹாரன் அடித்தபடி முதல்வரின் கார் அதிவேகமாக சென்றது.

முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு செய்வதற்கு கடிதம் அளித்து டோக்கன் வாங்கப்பட்டு இருந்தது. இதனால் சரியாக 12:05 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குள் சென்ற முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பகல் 12:11 மணிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சரியான நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதிற்காக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பதற்றத்துடன் இருந்தனர்.

'

கலெக்டர் அலுவலகம் வந்த முதல்வர் ரங்கசாமி அவரை பின்தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயம் சரியாக 12:07 மணிக்கு அலுவலகத்திற்குள் சென்றனர். இருவரிடமும் வேட்பு மனு இல்லை. இதனால் டென்ஷனாகி வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி, நல்ல நேரம் செல்கிறது வேட்பு மனு எங்கே என டென்ஷனாக கேட்டார். பரபரப்பு அடைந்த நமச்சிவாயமும், அவரது ஆதரவாளரிடம் வேட்பு மனு எங்கே என கேட்டார். தொடர்ந்து, வேட்புமனு உதவி மையத்தில் ஆதரவாளரிடம் இருந்த வேட்பு மனு உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மனுதாக்கல் செய்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us