/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' கல்விப்படி, விடுதி மானியம் 25 சதவீதம் உயர்வு
/
அரசு ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' கல்விப்படி, விடுதி மானியம் 25 சதவீதம் உயர்வு
அரசு ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' கல்விப்படி, விடுதி மானியம் 25 சதவீதம் உயர்வு
அரசு ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' கல்விப்படி, விடுதி மானியம் 25 சதவீதம் உயர்வு
ADDED : செப் 01, 2024 03:46 AM
அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்விப்படி, விடுதி மானியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களது இரண்டு குழந்தைகளை படிக்க வைக்க கல்வி படியும், அவர்கள் ஹாஸ்டலில் தங்கி படித்தால் விடுதி மானியமும் அரசு ஊழியர்களின் விதிமுறைகளின்படி வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு முறையும் டி.ஏ., உயர்வு 50 சதவீதம் தொடும் போது, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை 25 சதவீதம் உயர்த்தப்படும்.
அதன்படி டி.ஏ., 50 சதவீதம் தொட்ட நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்விப்படி, விடுதி மானியம் வரம்பு 25 சதவீதம் அதிகரித்தது. மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றி, புதுச்சேரியிலும், அரசு ஊழியர்களின் பிள்ளைக்களுக்கான தற்போது கல்விப்படி, விடுதி மானியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்விபடியாக மாதம் ரூ. 2,250 தற்போது பெற்று வருகின்னறர். தற்போது டி.ஏ., 50 சதவீதம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 2,812.50 கிடைக்கும். இதேபோல் விடுதி மானியம் 8,437.5 ரூபாய் மாதத்திற்கு கிடைக்கும்.
இதுமட்டுமின்றி கல்விப்படியில் புதிய மாற்றமும் புகுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பிள்ளைகளின் கல்விப்படி ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே முன்பு வழங்கப்பட்டது. கடந்த 2021-22ம் ஆண்டு இது எல்.கே.ஜி., யூ.கே.ஜி., சேர்த்து பிளஸ் 2 வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இப்போது ஒன்றாம் வகுப்பிற்கு முன்னதாக பிரி கே.ஜி., சேர்த்தாலும் கல்விப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிப்புகளில் சேரும் அரசு ஊழியர்கள் பிள்ளைகளுக்கு கல்விப்படி கிடைக்கும் என புதுமைகள் புகுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்து, அனைத்து அரசு துறைகளுக்கு சுற்றிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.