/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நல்லகாலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...' அழைப்பிதழ் வழங்கி ஓட்டுப்போட அழைப்பு

ADDED : ஏப் 14, 2024 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த அளவு ஓட்டுப்பதிவான தொகுதிகளில் ஓட்டு பதிவினை அதிகரிக்க தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது. வரும் 19ம் தேதி நடக்கும் தேர்தல் திருவிழாவில் தவறாமல் அனைவரும் வந்து ஓட்டளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, ஓட்டுச்சாவடிகள் அதிகாரிகள் சார்பில், தேர்தல் திருவிழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ், கடந்த சட்டசபை ஓட்டுப் பதிவு குறைந்திருந்த வெங்கட்டா நகர் ஏரியாவில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வினியோகித்து அழைப்பு விடுத்தனர். குடு குடுப்பைகாரர் வேடத்தில் தன்னார்வலர்கள், 'நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... நாட்டிற்கு நல்ல காலம் பொறக்குது... தேர்தலில் குடும்பத்துடன் அனைவரும் தவறாமல் வந்து ஓட்டளிக்க வேண்டும் என வீடு வீடாக அழைப்பு விடுத்தனர்.
அதேபோல், உழவர்கரையில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று, தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ்ராஜ், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு அதிகாரிகள் உடன் சென்று அழைப்பு விடுத்தனர்.