ADDED : மார் 11, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, சுசீலாபாய் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா ஆந்திரா மகா சபையில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவப்பிரகாசன் வரவேற்றார். விழாவில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பெண் கல்வி இணை இயக்குநர் சிவராமரெட்டி, வட்டம் 1 பள்ளித் துணை ஆய்வாளர் குலசேகரன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுபாஷ், பழனி, மைதிலி, தேவி, ஜெகதீஸ்வரி, சவுமியா செய்திருந்தனர். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலை நகழ்ச்சிகள் நடந்தன.