ADDED : ஏப் 27, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் அரசு துவக்கப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, பரிசளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளி துணை ஆய்வாளர் லிங்குசாமி திறந்து வைத்தார்.
ஆசிரியை கவிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் பிரபு தொகுப்புரை நிகழ்த்தினார்.
பல்வேறு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

