தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்ம விருது வழங்குவது குறித்து கவர்னர் தலைமையில் ஆலோசனை

பத்ம விருது வழங்குவது குறித்து கவர்னர் தலைமையில் ஆலோசனை

பத்ம விருது வழங்குவது குறித்து கவர்னர் தலைமையில் ஆலோசனை


ADDED : ஜூலை 20, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: புதுச்சேரியில் பத்ம விருதுகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் புதுச்சேரியை சேரந்த கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், மக்கள் தொடர்பு, குடிமைப்பணி, வர்தகம் மற்றும் தொழில், ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், பத்ம விருதுகளுக்கான ஆலோசனை கூட்டம், லோக் நிவாசில் நேற்று மதியம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். இதில், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவக்கொழுந்து, புதுச்சேரி பல்கலை துணை வேந்தர் பிரகாஷ்பாபு, அரசு செயலர்கள் முத்தம்மா, முகமது அசன் அபித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பத்ம விருதுக்கு புதுச்சேரியில் இருந்து பரிதுரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us